மாநில கபாடி போட்டி வேலம்மாள் பள்ளி முதலிடம்
பெரியகுளம் : லட்சுமிபுரம் ரோஸி வித்யாலயா பள்ளியில் நடந்த மாநில அளவிலான கபாடி போட்டியில் முதலிடம் பிடித்த சென்னை வேலம்மாள் பள்ளி அணிக்கு, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கோப்பை வழங்கி பாராட்டினார். பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் ரோஸி வித்யாலயா மாநில அளவிலான சி.பி.எஸ்.சி., பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கபாடி போட்டி நான்கு நாட்கள் நடந்தது. போட்டிகளை பள்ளி தலைவர் ராஜா, இயக்குனர் டாக்டர் முத்துகுகன், தாளாளர் ஐஸ்வர்யா, முதல்வர் பாரதரத்தினம் துவக்கி வைத்தனர். இதில் சென்னை, புதுச்சேரி, அந்தமான் நிகோபார், மதுரை, தேனி, விருதுநகர், கோவை, காஞ்சிபுரம், தூத்துக்குடி உட்பட தமிழகம், பல்வேறு பகுதிகளிலிருந்து 61 அணிகள் விளையாடினர். போட்டிகள் 14,17,19 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் விளையாடினர். பரிசளிப்பு விழா: 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் அணியில் சென்னை வேலம்மாள் பள்ளி (மேல அயனவாக்கம்) முதலிடம் பிடித்தது. வெற்றி பெற்ற அணிக்கு முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கிபாராட்டினார். தேசிய சி.பி.எஸ்.சி., விளையாட்டு பொறுப்பாளர் முத்துப்பாண்டி, வர்த்தக பிரமுகர்கள் சரவணன், கிருஷ்ணமூர்த்தி, உடற்கல்வி இயக்குனர் விமலேஸ்வரன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் நடுவர்களாக பங்கேற்றனர்.