ரேஷன் கடையில் இருப்பு குறைவு விற்பனையாளர் சஸ்பெண்ட்
தேனி: உத்தமபாளையம் தாலுகா, எரசக்கநாயக்கனுார் கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்ட சின்னஒவுலாபுரம் ரேஷன் கடையில் கடந்த வாரம் வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது இருப்பு பதிவேட்டில் குறிப்பிடப்பட்டிருந்ததை விட அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்டவை குறைவாக இருந்தன. இதனால் கடை விற்பனையாளர் மணிபாரதிக்கு ரூ. 29,125 அபராதம் விதித்து, மாவட்ட வழங்கல் அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் கடை விற்பனையாளர் மணிபாரதியை சஸ்பெண்ட் செய்ய தேனி கூட்டுறவு இணைபதிவாளர் நர்மதா உத்தரவிட்டார். சஸ்பெண்ட் உத்தரவு கூட்டுறவு சார்பதிவாளர் இமயவரம்பன் மூலம் விற்பனையாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.