உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கும்பக்கரை அருவியில் நீர்வரத்து குறைந்தது

கும்பக்கரை அருவியில் நீர்வரத்து குறைந்தது

பெரியகுளம்: கும்பக்கரை அருவியில் வெயிலின் தாக்கத்தால் தண்ணீர் வரத்து குறைந்தது. பெரியகுளம் கும்பக்கரை அருவிக்கு கொடைக்கானல் மலைப் பகுதியில் பெய்யும் மழை, அருவி பகுதியில் பெய்யும் மழையால் அருவிக்கு தண்ணீர் வருகிறது. மழை பெய்யாததால் ஜூலை 25 முதல் நீர் வரத்து குறைய துவங்கியது. ஜூலை 27 முதல் நேற்று வரை அருவிப்பகுதியில் வெயில் தாக்கம் அதிகம். இதனால் ஒரு பம்புசெட் அளவுக்கும் குறைவாக தண்ணீர் வருவதால், சுற்றுலா பயணிகள் 'காக்கா' குளியல் குளித்து செல்கின்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. இதே நிலை நீடித்தால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்தை தடுக்க ஓரிரு நாட்களில் கும்பக்கரை அருவி நுழைவு கேட் மூடப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி