மேலும் செய்திகள்
மாடு முட்டியதில் ஒருவர் இறப்பு
04-Mar-2025
கடமலைக்குண்டு : கண்டமனுார் ஊராட்சி ராமச்சந்திராபுரம் அருகே குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது.இப்பகுதிக்கு சத்திரப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் ஆகிறது. திட்டத்தின் குடிநீர் குழாய் கடமலைக்குண்டு மெயின் ரோட்டை ஒட்டிச் செல்கிறது. ராமச்சந்திராபுரம் அருகே கடந்த ஒரு மாதமாக குடிநீர் மெயின் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி ரோட்டில் செல்கிறது. தற்போது கோடை துவங்கிய நிலையில் தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. குடிநீர் வீணாவதை தடுக்க குடிநீர் வாரியம், ஊராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும்.
04-Mar-2025