உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கூடலுாரில் குடிநீர் சப்ளை பாதிப்பு

கூடலுாரில் குடிநீர் சப்ளை பாதிப்பு

கூடலுார் : லோயர்கேம்ப் பம்பிங் ஸ்டேஷனில் பிரச்னை காரணமாக கூடலுாரில் குடிநீர் சப்ளை பாதிப்பு ஏற்பட்டது.லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றிலிருந்து தண்ணீர் பம்பிங் செய்யப்பட்டு நீர் தேக்க தொட்டிகள் மூலம் சுத்திகரிக்கப்பட்ட பின் கூடலுாருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. கடந்த நான்கு நாட்களாக பெய்த கனமழையால் லோயர்கேம்பில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. மேலும் பம்பிங் மோட்டாரில் மண் மேவி பம்பிங் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கடந்த மூன்று நாட்களாக நகராட்சியில் உள்ள 21 வார்டுகளுக்கும் குடிநீர் சப்ளை செய்வதில் பாதிப்பு ஏற்பட்டது. லோயர்கேம்பில் நகராட்சி மூலம் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. பணி முடிவடைந்த நிலையில் தண்ணீர் பம்பிங் செய்யப்பட்டு விரைவில் குடிநீர் சப்ளை செய்யப்படும் என நகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை