உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  மேகமலை புலிகள் காப்பக பகுதியில் நீர்நிலை பறவைகள் கணக்கெடுப்பு

 மேகமலை புலிகள் காப்பக பகுதியில் நீர்நிலை பறவைகள் கணக்கெடுப்பு

கம்பம்: மேகமலை புலிகள் காப்பகத்தில் நீர்நிலை பறவைகள் கணக்கெடுப்பு நேற்று மாலை துவங்கி இன்று ( டிச.28 ) காலையில் நிறைவு பெறுகிறது. வனத்துறை சார்பில் யானைகள், புலிகள், நீர்நிலைப் பறவைகள் கணக்கெடுப்பு குறிப்பிட்ட காலக்கெடுவில் நடத்தப்படுகிறது. வன உயிரினங்களின் எண்ணிக்கையை வைத்து, அதன் நிலை குறித்து மதிப்பீடு செய்ய முடியும். நீர்நிலை பறவைகளான கொக்கு, நாரை, மீன்கொத்தி , மைனா உள்ளிட்ட நீர்நிலை பறவைகளின் கணக்கெடுப்பு ஆண்டுதோறும் வனத்துறையால் நடத்தப்படுகிறது. இந்தாண்டு மேகமலை புலிகள் காப்பகத்திற் குட்பட்ட 28 இடங்களில் டிச. 27 , 28 தேதிகளில் கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இக் கணக்கெடுப்பில் 110 வனப் பணியாளர்கள், 30 தன்னார்வலர்கள் என 140 பேர்கள் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு நேற்று காலை சின்னமனூர் வனச்சரக அலுவலகத்தில் கணக்கெடுப்பு பயிற்சி வழங்கப் பட்டது. பயிற்சிக்கு உதவி வனப்பாதுகாவலர் சாய்சரண் ரெட்டி, சின்னமனூர் ரேஞ்சர் திருமுருகன் விளக்கி கூறினார். நேற்று மாலையும், இன்று காலை 6:00 மணி முதல் 10:00 மணி வரையிலும் சண்முகா நதி, எரசை மஞ்சள் நதி , உத்தமபாளையம் தாமரைக்குளம், கம்பம் வீரப்ப நாயக்கன்குளம், சின்னமனூர் உடையகுளம், செங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கணக்கெடுப்பு நடைபெறுகிறது. கணக்கெடுப்பின் விபரங்கள், மாவட்ட அளவிலும், பின் மாநில அளவிலும் புள்ளி விபரங்களை ஒருங்கிணைத்து வெளியிடப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை