மனைவி மாயம் கணவர் புகார்
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே கொண்டமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் 40, இவரது மனைவி பாண்டியம்மாள் 37, இவர்களுக்கு சினேகா 15, ஹரிஸ் 13, இந்த இரு குழந்தைகள் உள்ளனர். ஆகஸ்ட் 22ல் ஆண்டிபட்டியில் உள்ள வங்கிக்கு சென்று வருவதாக குழந்தைகளுடன் சென்ற பாண்டியம்மாள் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. முருகேசன் புகாரில் ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.