உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கொடைக்கானலில் வேன் கவிழ்ந்த விபத்தில் பெண் பலி

கொடைக்கானலில் வேன் கவிழ்ந்த விபத்தில் பெண் பலி

தேவதானப்பட்டி:திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், டம்டம் பாறை அருகே பாறை மீது வேன் மோதி கவிழ்ந்த விபத்தில் காயமடைந்த சிகிச்சையில் இருந்த மதுரை விளாச்சேரியை சேர்ந்த ஜீன்னத் பேகம் 54,நேற்று இறந்தார். மதுரை விளாச்சேரி குலாம் அர்ஷத் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வேனில் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு மதுரை புறப்பட்டனர். டம்டம் பாறை அருகே வேன் வந்த போது கட்டுபாட்டை இழந்து ரோட்டோரம் இருந்த பாறையில் மோதி ரோட்டில் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த சபி 10. அனீஸ் பாத்திமா 26. யாசின் 35. ஜீன்னத்பேகம் 54. ஆரிப் 5. அர்தி 5. சகானா 12. அலிசா 1. முகமது ஆரிப் 11 உட்பட 20 க்கும் அதிகமானோர் வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் முதலுதவிக்கு பிறகு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஜீன்னத் பேகம் நேற்று இறந்தார். தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி