உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கப்பலில் வேலை: ரு.3 லட்சம் மோசடி இருவர் மீது வழக்கு

கப்பலில் வேலை: ரு.3 லட்சம் மோசடி இருவர் மீது வழக்கு

உத்தமபாளையம்: உத்தமபாளையம் அருகே உள்ள பல்லவராயன்பட்டியை சேர்ந்த இளைஞர் ஆனந்த் 21, என்பவரிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 3 லட்சம் மோசடி செய்த கன்னியாகுமரியை சேர்ந்த தில்லை ராஜா, சென்னையை சேர்ந்த ராஜசேகர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பல்லவராயன்பட்டியை சேர்ந்த முத்துப்பாண்டி மகன் ஆனந்த். தேனி பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு கன்னியாகுமரியை சேர்ந்த தில்லைராஜா என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. தில்லைராஜா கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூறியதை நம்பிய ஆனந்த், பிப்ரவரி 15, 17ம் தேதி தில்லைராஜாவின் வங்கி கணக்கு, ஆன்லைன் மூலம் ரூ.3 லட்சம் அனுப்பினார். ஆனந்தை தில்லைராஜா சென்னையில் ஏஜன்ட் ராஜசேகரை சந்திக்க அனுப்பினார். ராஜசேகர் மும்பையில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு அனுப்பினார். அவர்கள் ஆனந்தை கோவாவிற்கு அனுப்பினர். அதன்பின் கப்பலில் வேலை நடப்பதாகவும் அதுவரை காத்திருக்குமாறும் கூறினர். 10 நாட்களாகியும் வேலை வழங்காததால் மீண்டும் மும்பைக்கு வந்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஆனந்த், தேனி எஸ்.பி.யிடம் புகார் செய்தார். அதன்பேரில் தில்லைராஜா, ராஜசேகர் மீது கோம்பை எஸ். ஐ. பாண்டிச்செல்வி வழக்கு பதிவு செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை