உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த தொழிலாளி உயிரிழப்பு

பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த தொழிலாளி உயிரிழப்பு

கடமலைக்குண்டு : கடமலைக்குண்டு அருகே குடும்பத் தகராறில் உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்த ஓட்டல் தொழிலாளி மாரிமுத்து 35, சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.கடமலைக்குண்டு அருகே நரியூத்தை சேர்ந்தவர் மாரிமுத்து 35. ஓட்டல் தொழிலாளி. இவரது மனைவி மீனா 25. இரு மகள்கள் உள்ளனர். கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் மதியம் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாரிமுத்து உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அருகில் இருந்த மீனா மற்றும் குழந்தைகளும் தீக்காயம் அடைந்தனர்.இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் வசித்தவர்கள் ஓடிச்சென்று தீயை அணைத்தனர். மாரிமுத்து உடல் முழுவதும் கருகியது. மீனாவிற்கும் வயிறு முதல் கால் வரை உடல் கருகியது. குழந்தைகளுக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டன.தீக்காயம் அடைந்த நால்வரும் தேனி அரசுமருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை மாரிமுத்து பலியானார். மீனா, இரு மகள்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சையில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை