உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சிறுமி பலாத்காரம் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

சிறுமி பலாத்காரம் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

தேனி: தேனி மாவட்ட சிறுமியை பலாத்காரம் செய்த வெல்டிங் தொழிலாளி பிரசாத்துக்கு 29, இருபதாண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 10ம் வகுப்பு முடித்த சிறுமி டிப்ளமோ நர்சிங் படித்தார். சிறுமியின் அண்ணன் உறவு முறை கொண்ட வெல்டிங் தொழிலாளி பிரசாத், அவரை ஏமாற்றி பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். 2022 நவ., பிரசாத் வீட்டிற்கு சென்ற சிறுமியை பலாத்காரம் செய்தார். 2023ல் சிறுமிக்கு வயிற்றுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் பரிசோதித்த போது நிறைமாத கர்ப்பிணியாக இருப்பது தெரிந்தது. டாக்டர்கள் தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்ததில் 2023 ஆக., 15 சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. சிறுமி வாக்கு மூலத்தின் அடிப்படையில் பிரசாத்தை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. பிரசாத்துக்கு 20 ஆண்டுகள் சிறை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை