உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / உலக சுற்றுச்சூழல் தின  கட்டுரை போட்டி

உலக சுற்றுச்சூழல் தின  கட்டுரை போட்டி

தேனி: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்ட வன அலுவலர் சமர்த்தா வழிகாட்டுதலில் ஆண்டிபட்டி வனச்சரகம் சார்பில் ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பல்வேறு போட்டிகள் நடந்தன. வனச்சரகர் அருள்குமார் தலைமை வகித்தார். நடப்பாண்டின் கருப்பொருளான பிளாஸ்டிக் மாசை முடிவுக்கு கொண்டு வருவோம்' என்ற தலைப்பில் நேற்று ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளை மூன்று பிரிவுகளாக பிரித்து கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு பள்ளி காலை வழிபாட்டு கூட்டத்தில் நடக்க உள்ளது. அதன்பின் மாணவர்கள், இந்தாண்டு கருப்பொருளான 'BEAT PLASTIC POLLUTION' என்ற எழுத்துரு வடிவில் மாணவர்கள் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர் என ரேஞ்சர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி