உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / உலக மன நல தின விழிப்புணர்வு கருத்தரங்கு

உலக மன நல தின விழிப்புணர்வு கருத்தரங்கு

தேனி: தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் மனநல மருத்துவத் துறையின் சார்பில், உலக மன நல தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.கல்லுாரி முதல்வர் முத்துசித்ரா தலைமை வகித்து பேசுகையில், 'உடல்நலத்தை போன்று, மன நலத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது அவசியம்,' என்றார்.தமிழ்நாடு மனநல மருத்துவர்கள் சங்க தலைவர் டாக்டர் சப்ரீன் சஞ்சீவ்ரோஸ், பணியிடத்தில் ஏற்படும் மனநல சிக்கல்கள், மனநலத்தை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கினார்.மாணவர்களுக்கான 'ரீல்ஸ்' போட்டிகளில் தேர்வு செய்த குறும்படங்களை திரையிட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்ட்டன.நிகழ்வில் துணை முதல்வர் டாக்டர் தேன்மொழி, மருத்துவ கண்காணிப்பாளர் விஜயானந்த், நிலைய மருத்துவ அலுவலர் சிவக்குமரன்,பங்கேற்றனர்.முன்னதாக துறைத் தலைவர் ஜான்சேவியர் சுகதேவ் வரவேற்றார். இணைப் பேராசிரியர் அருண் வெங்கடேஷ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி