உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / உலக மண் தின கருத்தரங்கம்

உலக மண் தின கருத்தரங்கம்

தேனி: கலெக்டர் அலுவலகத்தில் வேளாண் துறை சார்பில் உலக மண் தின கருத்தரங்கம் நடந்தது. கலெக்டர் ஷஜீவனா தலைமை வகித்தார். வேளாண் இணை இயக்குநர் சாந்தாமணி முன்னிலை வகித்தார். இயற்கை உரங்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள், பூச்சி கொல்லி பயன்பாட்டினை குறைத்தல், மண்பரிசோதனையின் அவசியம், நானோ யூரியா, டி.ஏ.பி., பயன்படுத்துதல் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மண்மாதிரி சேகரித்தல் பற்றி விளக்கமளிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு மண் வளஅட்டை வழங்கப்பட்டது. கருத்தரங்கில் கலெக்டர் நேர்முக உதவியாளர் வளர்மதி, வேளாண் துணை இயக்குநர்கள் ராஜசேகரன், சின்னகண்ணு, பால்ராஜ், உதவி இயக்குநர்கள், வேளாண் அலுவலர்கள், விவசாயிகள் கருத்தரங்கில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ