இலவச திருமணத்திற்கு விண்ணப்பிக்கலாம்
தேனி : ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் இலவச திருமண திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள பிரபல கோயில்களில் சுபமுகூர்த்த தினங்களில் திருமணம் நடத்தப்படும். இதில் திருமணம் செய்து கொள்ள விரும்புவோர் பழனிசெட்டிபட்டி பஸ் ஸ்டாப் அருகே உள்ள ஹிந்து சமய அறநிலையதுறை உதவி ஆணையர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு அலுவலகம் அல்லது அருகில் உள்ள ஹிந்து சமய அறநிலைத்துறை கோயில் அலுவலகத்தை அணுகலாம். இத்திட்டம் பற்றி அதிகாரிகள் கூறியதாவது: இத்திட்டத்தில் அடுத்த மாதம் சில ஜோடிகளுக்கு திருமணம் நடத்த ஏற்பாடுகள் நடக்கின்றன. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு ஜோடிகள் தேர்வு செய்யப்படுவர். தங்கத்தாலி, சீர்வரிசை பொருட்கள், ஹிந்து சமய அறநிலையத்துறையால் வழங்கப்படும்.