உயர்கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
தேனி: மத்திய பல்கலை, ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., என்.ஐ.டி., உள்ளிட்ட உயர்கல்வி நிலையங்களில் படிக்கும் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபின மாணவர்களுக்கு அத்துறை சார்பில் உதவித்தொகை ரூ.2 லட்சம் வழங்கப்படுகிறது. உதவித்தொகை பெறவிருபும் மாணவர்கள் ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். விண்ணப்பத்தினை https: //bcmbcmw.tn.gov.in/welfscheme.htm#scholarshipschemes என்ற இணைய முகவரில் பதிவிறக்கம் செய்யலாம். அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வி நிறுவன சான்றொப்பத்தினை இணைந்து அக்.,10க்குள் சென்னை சேப்பாக்கம் எழிலகம் இணைப்பு கட்டடத்தில் இயங்கும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்கக அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.