உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  இந்திய குடிமை பணி தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

 இந்திய குடிமை பணி தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

தேனி: மீனவளத்துறை, அகில இந்திய குடிமை பணி பயிற்சி மையம் இணைந்து மீனவ சமுதாயத்தை சேர்ந்த 20 பட்டதாரிகளுக்கு குடிமை பணிக்கான போட்டி தேர்வுக்கான ஆயத்த பயிற்சி வழங்குகிறது. இப்பயிற்சியில் கடல், உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசுகள் பயன்பெறலாம். விருப்ப முள்ளவர்கள் விண்ணப்பத்தை வைகை அணை பூங்கா ரோட்டில் உள்ள மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெறலாம். பூர்த்தி செய்த படிவங்களை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நவ., 25 மாலை 5:00 மணிக்குள் நேரடியாக அல்லது பதிவு தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு மீன் வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை