உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / திருமணம் முடித்து 40 வது நாளில் வாலிபர் தற்கொலை

திருமணம் முடித்து 40 வது நாளில் வாலிபர் தற்கொலை

கம்பம் : கம்பம் செல்லாண்டியம்மன் கோயில் தெரு அரசன் மகன் அஜித் 26, இவருக்கும் இதே ஊரை சேர்ந்த சினேகா 23,க்கும் 40 நாட்களுக்கு முன் திருமணம் நடந்தது. கூலி தொழிலாளியான அஜித் தினமும் மதுகுடித்து விட்டு வருவதை தாயார் விக்டோரியா தட்டிக் கேட்டுள்ளார். மனைவி கண்டித்தார்.இதனால் மனமுடைந்த அஜித் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். வெளியில் சென்று இருந்த தாய், மனைவி வீட்டிற்கு வந்த போது, அஜித் துாக்கிட்டதை பார்த்து கதறினர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை இறக்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். கம்பம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை