உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  கவிழ்ந்த வாகனம் டூவீலர் விபத்தில் வாலிபர் பலி

 கவிழ்ந்த வாகனம் டூவீலர் விபத்தில் வாலிபர் பலி

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் விபத்தில் சிக்கிய நிலையில், டூவீலரில் வந்த சசிக்குமார் 26, விபத்தில் கவிழ்ந்த வாகனத்தில் மோதி நடந்த தொடர் விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். தேவதானப்பட்டி வத்தலக்குண்டு ரோடு ஜி.மீனாட்சிபுரம் பாய்ஸ் டவுன் அமைந்துள்ளது. இதன் அருகே நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு வத்தலக்குண்டில் இருந்து ராயப்பன்பட்டி நோக்கி சென்ற கார் நிலை தடுமாறியது. எதிரே கொடைக்கானலில் இருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு சென்னைக்கு சென்ற வேன் வாகனத்தில் மோதியது. இந்த விபத்தில் வாகனம் கவிழ்ந்தது. அப்போது பின்னால் வந்த மற்றொரு கார், வாகனத்தில் மோதியது. 10 நிமிடங்களில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதில் போக்குவரத்து பாதித்தது. வாகனங்கள் சேதமானது. வாகன டிரைவர்கள் அனைவரும் காயத்துடன் தப்பினர். தேவதானப்பட்டி போலீசார் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெரியகுளத்தில் வத்தலகுண்டு நோக்கிச் சென்ற டூவீலர் விபத்து வாகனங்களில் மோதியது. இதில் பெரியகுளம் வடகரையைச் சேர்ந்த சசிக்குமார் 26, சம்பவ இடத்திலேயே பலியானார். தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை