உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / ஆழ்வார்குறிச்சி வட்டார மாட்டு வண்டி தொழிற்சங்க கூட்டம்

ஆழ்வார்குறிச்சி வட்டார மாட்டு வண்டி தொழிற்சங்க கூட்டம்

ஆழ்வார்குறிச்சி : ஆழ்வார்குறிச்சி வட்டார மாட்டு வண்டி தொழிற்சங்க ஏஐடியுசி கூட்டம் நடந்தது. ஆழ்வார்குறிச்சி வட்டார விவசாயிகள் சங்க கட்டடத்தில் நடந்த கூட்டத்திற்கு சுப்பையா தலைமை வகித்தார். கீழாம்பூர் பஞ்., தலைவர் ஈஸ்வரன், கடையம், பாப்பாக்குடி ஒன்றிய செயலாளர் வேலாயுதம், ஆழ்வார்குறிச்சி நகர செயலாளர் ஈஸ்வரவேல், ஒன்றிய கவுன்சிலர் கனகராஜ், செல்லத்துரை, சமுத்திரம், பச்சாத்து கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி தலைவராக சைலப்பன், செயலாளராக ஈஸ்வரவேல், பொருளாளராக லெட்சுமணன் மற்றும் 10 பேர் கொண்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில், காவல்துறை மற்றும் வருவாய் துறையினரால் பிடித்து வைக்கப்பட்ட மாட்டு வண்டிகளை எந்தவித நிபந்தனையுமின்றி விடுவிக்க வேண்டும். மாட்டு வண்டியில் மணல் அள்ள தமிழக அரசு பாஸ் வழங்க வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை