உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / பாளை.யில் இன்று மாம்பழச்சங்கம்மாணவ, மாணவிகள் பேரணி

பாளை.யில் இன்று மாம்பழச்சங்கம்மாணவ, மாணவிகள் பேரணி

திருநெல்வேலி:பாளை.யில் தென்னிந்திய திருச்சபை சார்பில் இன்று(13ம் தேதி) மாம்பழச்சங்கம் நடைபெறுகிறது. இதைமுன்னிட்டு நேற்று மாணவ, மாணவிகளின் பேரணி நடந்தது.நெல்லை திருமண்டலம் தென்னிந்திய திருச்சபை சார்பில் மாம்பழச் சங்கம் மற்றும் 231வது ஸ்தோத்திரப் பண்டிகை இன்று(13ம் தேதி) பாளை.நூற்றாண்டு மண்டபத்தில் நடக்கிறது. இதைமுன்னிட்டு நேற்று மாலை மிலிட்டரி லைன்ஸ் ஆலய வளாகத்தில் நினைவு ஸ்தோத்திர ஆராதனை நடந்தது. தொடர்ந்து பேரணி நடந்தது. பேரணியை பிஷப் கிறஸ்துதாஸ் துவங்கி வைத்தார். தெற்கு பஜார் வழியாக வந்த பேரணி பாளை.நூற்றாண்டு மண்டபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து கொடியேற்றம் நடந்தது. இரவு 7 மணிக்கு பால்சேக் சின்ன காசிம் நாதஸ்வர இன்னிசை நடந்தது.இந்நிகழ்ச்சியில், உப தலைவர் பில்லி, லே செயலாளர் தேவதாஸ், குருத்துவ காரியதரிசி வசந்தகுமார், பொருளார் செல்வின் ஜெயராஜ், திருமண்டல அனைத்து குருமார்கள், அனைத்து பள்ளி, கல்லூரி ஆசிரிய, ஆசிரியர்கள், தாளாளர்கள், தலைமையாசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.இன்று(13ம் தேதி) நூற்றாண்டு மண்டபத்தில் மாம்பழச் சங்கம் நடக்கிறது. காலை 8.30 மணிக்கு திருவிருந்து ஆராதனை, நாதஸ்வர இன்னிசை, மதியம் 12 மணிக்கு பண்டிகை ஆராதனை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. நாளை(14ம் தேதி) 231வது ஆண்டு விழாவும், காலை 9.30 மணிக்கு ஸ்தோத்திர பண்டிகை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ