உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு போட்டி

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு போட்டி

தென்காசி : தென்காசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேச்சு போட்டி, கட்டுரை போட்டி நடந்தது.தென்காசி டிராபிக் போலீஸ் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேச்சு போட்டி, கட்டுரை போட்டி நடந்தது. மஞ்சம்மாள் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த இப்போட்டிக்கு தென்காசி டி.எஸ்.பி. பாண்டியராஜன் தலைமை வகித்தார். டிராபிக் இன்ஸ்பெக்டர் சாம் வேதமாணிக்கம், பள்ளி தலைமையாசிரியை உமாசித்ரா முன்னிலை வகித்தனர். போட்டியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர்.பேச்சு போட்டியில் உயர்நிலை பிரிவில் புனித மிக்கேல் பள்ளி மாணவி பெற்றோ ஜோவிதா முதலிடமும், ஹில்டன் பள்ளி மாணவி அஸ்வினி இரண்டாமிடமும், செங்கோட்டை ஏ.ஜி.பள்ளி மாணவி மெர்ஸி பிரியா மூன்றாமிடமும் பெற்றனர்.

மேல்நிலை பிரிவில் புனித மிக்கேல் பள்ளி மாணவி ரில்ஸானா பாத்திமா முதலிடமும், பாரத் பள்ளி மாணவி கோப்பெரும்தேவி இரண்டாமிடமும், மஞ்சம்மாள் அரசு பள்ளி மாணவி அனுசுயா மூன்றாமிடமும் பெற்றனர்.கட்டுரை போட்டியில் உயர்நிலை பிரிவில் ஹில்டன் பள்ளி மாணவி சுபலோகா முதலிடமும், மஞ்சம்மாள் அரசு பள்ளி மாணவி பாலாமணி இரண்டாமிடமும், மேல்நிலைப் பிரிவில் பாரத் பள்ளி மாணவி கனிமொழி முதலிடமும், மஞ்சம்மாள் அரசு பள்ளி மாணவி தீபாசில்ஷயா இரண்டாமிடமும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ