மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
களக்காடு:களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோமதிஅம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடந்தது.களக்காட்டில் வரலாற்று சிறப்புமிக்க சத்தியவாகீஸ்வரர் கோமதிஅம்மன் கோயில் அமைந்துள்ளது. கி.பி11ம் நூற்றாண்டில் வீரமார்த்தாண்ட மன்னரால் கட்டப்பட்ட இந்த கோயிலின் முகப்பில் அமைந்துள்ள ராஜகோபுரம் பல ஆண்டுகளாக சிதைந்து வந்தது. இந்நிலையில் களக்காடு பக்தர் பேரவையினர் ரூ.80லட்சம் செலவில் திருப்பணிகள் நடத்தினர். இதுபோல் கோயிலில் உள்ள சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்மன், நவநீதகிருஷ்ணர் மற்றும் கொடிமர சன்னதி கோபுரங்களும் புதுப்பிக்கப்பட்டது.இதையொட்டி மகா கும்பாபிஷேக விழா கடந்த 11ம் தேதி துவங்கியது. தினசரி சிறப்பு பூஜை, யாகசாலை பூஜைகள் நடந்தன. 4ம் நாளான நேற்று (வியாழன்) காலை 5.30மணிக்கு ஆறாம்கால யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கும்பங்கள் கோயில் பிரகாரங்களில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. காலை 8.35 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
ராஜகோபுரம் மற்றும் 4 விமானங்களுக்கும் ஒரே நேரத்தில் சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். அப்போது விண்ணில் கருடன்கள் சுற்றிவந்தன.விழாவில் இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் பகழேந்திரன், ராமசுப்பு எம்.பி. யூனியன் சேர்மன் தமிழ்செல்வன், பேரூராட்சி தலைவர் முத்துகிருஷ்ணன் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.அதன்பின் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்களும், விசேஷ அலங்கார தீபஆராதனைகளும் நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை களக்காடு பக்தர் பேரவையினர் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்துஇருந்தனர்.
29-Sep-2025
25-Sep-2025