மேலும் செய்திகள்
நெல்லை வாலிபர் சிக்கினார்
16 minutes ago
மின் கம்பங்கள் முறிந்து விழுந்து பசு, கன்று பலி
35 minutes ago
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், கீழபாப்பாக்குடியைச் சேர்ந்தவர் தங்கராஜ்; கூலித் தொழிலாளி. இவரது மனைவி சாந்தி, 28. இவர்களின் மகள் இசக்கியம்மாள், 9, நான்காம் வகுப்பு மாணவி. நேற்று காலை சாந்தி, தன் மகளுடன் அங்குள்ள நீர்மேலழகியான் குளத்திற்கு குளிக்க சென்றிருந்தார். அப்போது, திடீரென குளத்திற்குள் இறங்கிய இசக்கியம்மாள், அங்கு மண் தோண்டப்பட்டதால் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கி தத்தளித்தார். அவரை காப்பாற்ற சாந்தியும் இறங்கினார். சிறிது நேரத்திலேயே தாய், மகள் இருவரும் நீரில் மூழ்கி பலியாயினர். பாப்பாக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
16 minutes ago
35 minutes ago