உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / மாஞ்சோலையை தமிழக டான் டீ நிறுவனம் ஏற்று நடத்த கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

மாஞ்சோலையை தமிழக டான் டீ நிறுவனம் ஏற்று நடத்த கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

தென்காசி:மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி விருப்ப ஓய்வில் அனுப்புவதற்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.தென்காசியில் அவர் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு மலைப்பகுதியில் மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் 8,634 ஏக்கரில் அமைந்துள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் பி.பி.டி.சி., நிறுவனத்திற்கு தரப்பட்ட 99 ஆண்டு குத்தகை 2028ல் நிறைவு பெறுகிறது. குத்தகைதான் நிறைவு பெறுகிறதே தவிர அந்த தேயிலைத் தோட்டம் தமிழக அரசுக்கு சொந்தமானது. விருப்ப ஓய்வு என்பது அவர்களாக எடுப்பது. ஆனால் தற்போது பி.பி.டி.சி., நிர்வாகம் தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி மிரட்டி கையெழுத்து வாங்குகிறது. எனவே தமிழக அரசு தொழிலாளர் நல ஆணையரை அங்கு அனுப்பி கட்டாயப்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும்.தொழிலாளர்களுக்கு தேயிலை தொழிலை தவிர வேறு தொழில் தெரியாது. நான்கு தலைமுறைகளாக அங்கு பணியாற்றுவதால் சொந்த ஊர் என்பது மாஞ்சோலை தான். தமிழக அரசின் டான் டீ தேயிலை தோட்ட கழகம் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை ஏற்று நடத்த வேண்டும். புதிய தமிழகம் வழக்கறிஞர் குழு இன்று மாஞ்சோலை செல்கிறது. மேலும், தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை