உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / கைதி பல் பிடுங்கிய விவகாரம் ஏ.எஸ்.பி., உட்பட 12 பேர் ஆஜர்

கைதி பல் பிடுங்கிய விவகாரம் ஏ.எஸ்.பி., உட்பட 12 பேர் ஆஜர்

திருநெல்வேலி:அம்பாசமுத்திரத்தில் போலீஸ் விசாரணையின்போது கைதிகளின் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் ஏ.எஸ்.பி., பல்வீர் சிங் உட்பட 14 பேரும் மார்ச் 28ல் திருநெல்வேலி கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி.,யாக இருந்த பல்வீர்சிங், போலீஸ் ஸ்டேஷன்களில் விசாரணைக்கு வந்த நபர்களின் பற்களை பிடுங்கியதாக 10க்கும் மேற்பட்டோர் புகார் கூறினர்.இதுகுறித்து சேரன்மகாதேவி சப் -- கலெக்டர் சபீர் ஆலம் விசாரித்தார். தமிழக அரசின் முதன்மைச் செயலர் அமுதா சிறப்பு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, 80 சாட்சிகளிடம் விசாரித்தார். இந்த வழக்கு, பின்னர் சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பல்வீர்சிங், இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி உட்பட 14 போலீசார் மீது நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.நான்கு வழக்குகளிலும் பல்வீர்சிங் முதல் குற்றவாளியாக உள்ளார். இவ்வழக்குகளில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.நேற்று முன்தினம் காலையில் பல்வீர்சிங் உட்பட 12 பேர் முதலாவது ஜே.எம்., கோர்ட்டில் ஆஜராகினர். இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, எஸ்.ஐ., முருகேசன் ஆஜராகவில்லை. மார்ச் 28ம் தேதி அடுத்த விசாரணைக்கு ஆஜராகுமாறு மாஜிஸ்திரேட் திரிவேணி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை