உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / போக்சோ வழக்கில் 25 ஆண்டு சிறை

போக்சோ வழக்கில் 25 ஆண்டு சிறை

திருநெல்வேலி:சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 58 வயது நபருக்கு25 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே தம்புபுரத்தை சேர்ந்தவர் முத்தையா 58. இவர் 2022ல் அதே பகுதியைச் சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசார் அவரை போக்சோ வழக்கில் கைது செய்தனர். வழக்கு திருநெல்வேலி போச்சோ நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் முத்தையாவுக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை