உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / குப்பைத்தொட்டியில் இறந்த நிலையில் பச்சிளங்குழந்தை

குப்பைத்தொட்டியில் இறந்த நிலையில் பச்சிளங்குழந்தை

திருநெல்வேலி:திருநெல்வேலி மேலப்பாளையம் ராஜாநகரில் துாய்மை பணியாளர்கள் குப்பையை சேகரித்த போது ஒரு குப்பைத்தொட்டியில் பிறந்து ஒரு சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை இறந்த நிலையில் கிடந்தது. குழந்தை உடல் ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலப்பாளையம் போலீசார் விசாரித்தனர்.இதே பகுதியில் ஓராண்டுக்கு முன் பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டு அரசின் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. சமீபத்தில் ஒரு குழந்தை இறந்த நிலையில் மீட்கப்பட்டது. தற்போதைய குழந்தை இறந்த நிலையில் மீட்கப்படுவது மூன்றாவது சம்பவமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை