வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மாணவனின் பெயர்களை போடவில்லை ஒரு வேலை அமைதி மார்கத்வரை சேர்ந்தவரா என்ன என் என்றால் மேல பாளையம் ஒரு மினி பாகிஸ்தான் சில தெருவுகளில் நீங்கள் நடந்து சென்றால் பாகிஸ்தானில் இருப்பது போல உணர்வு வரும்
திருநெல்வேலி:திருநெல்வேலி ரோஸ்மேரி மெட்ரிக்குலேஷன் பள்ளியில், எட்டாம் வகுப்பு மாணவரை, சக மாணவனை வகுப்பறையில் சரமாரியாக அரிவாளால் வெட்டினான்.தடுக்க முயன்ற ஆசிரியைக்கும் வெட்டு விழுந்தது. இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். வெட்டிய மாணவனிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6jokmloc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0திருநெல்வேலி பாளையங்கோட்டை, ரோஸ்மேரி மெட்ரிக்குலேஷன் பள்ளியில், எட்டாம் வகுப்பு ஆசிரியை ரேவதி, நேற்று காலை, முதல் பாடவேளை முடிந்து அடுத்த வகுப்பிற்கு செல்ல தயாரானார். விசாரணை
அப்போது, வகுப்பறையில் பின் பெஞ்சில் இருந்த மாணவன் ஒருவன், பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, முன் பெஞ்சில் இருந்த சக மாணவனை சரமாரியாக வெட்டினான். இதில், அந்த மாணவனின் தலை, தோள்பட்டை, முதுகு, வலது மற்றும் இடது கைகளில் வெட்டு விழுந்தது.இதைக்கண்டு வகுப்பறையிலிருந்த மற்ற மாணவ -- மாணவியர் அலறினர். வாசலில் நின்ற ஆசிரியை ரேவதி வகுப்பறைக்குள் ஓடிச்சென்று, மாணவனை மேலும் வெட்டாமல் தடுத்தார்.அப்போது, ஆசிரியைக்கும் கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதுகுறித்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அரிவாளால் வெட்டிய மாணவன், சட்டையில் ரத்தம் தோய்ந்த நிலையில், போலீஸ் ஸ்டேஷனுக்கு நடந்து சென்றான். மாணவனை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். காயமுற்ற மாணவனும், ஆசிரியையும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவல் வெளியானதும், மாணவர்களின் பெற்றோர் பள்ளி முன் குவிந்தனர். குறிப்பிட்ட வகுப்பு மாணவர்கள் மட்டும் பள்ளியில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டனர். வெட்டப்பட்டு, காயமுற்ற மாணவனின் தந்தை மேலப்பாளையம் நிஜாமுதீன், தாய் செய்யது ஜாஸ்மின் ருஷானா மற்றும் உறவினர்கள் மருத்துவமனை வந்தனர். காரணம் என்ன?
வெட்டிய மற்றும் வெட்டுப்பட்ட மாணவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர். பென்சில் கொடுக்கல், வாங்கலில் அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது. ஒரு மாதமாக இருவரும் பேசிக் கொள்ளவில்லை. அவர்களை, ஆசிரியையும் கண்டித்துள்ளார். மாணவர்களின் பெற்றோரையும் அழைத்து பேசி, ஆசிரியர்கள் கண்டித்து அனுப்பியுள்ளனர். இரு மாணவர்களும் வெவ்வேறு பெஞ்சுகளில் உட்கார வைக்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று காலை பள்ளிக்கு வரும் போது, பையில் அரிவாளுடன் வந்த மாணவன், அந்த மாணவனை வெட்டியுள்ளான்.போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி, துணை கமிஷனர் வினோத் சாந்தாராம், உதவி கமிஷனர் சுரேஷ் மற்றும் போலீசார் பள்ளிக்கு வந்தனர். வெட்டிய மாணவனை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளதாகவும், விசாரணைக்கு பின் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் அவரை ஒப்படைக்க உள்ளதாகவும் தெரிவித்தனர். பள்ளியில் முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார் ஆய்வு செய்தார். அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் ஆயுதங்களை கொண்டு வருவதை தவிர்க்க, பைகளை சோதனையிடும் முறையை கண்டிப்பாக செயல்படுத்த முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.
நெல்லை மாவட்டத்தில், ஜாதி ரீதியான மோதல்கள், 1980ல் துவங்கின. பின், கல்லுாரிகள் மற்றும் பள்ளிகள் அளவிலும் நடந்து வருகின்றன. கங்கைகொண்டான், கோபாலசமுத்திரம், நாங்குநேரி, களக்காடு வள்ளியூர் போன்ற பல்வேறு பள்ளிகளிலும், இத்தகைய மோதல்கள் நடந்துள்ளன. இதுவரையிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டுமே நடந்த மோதல் மற்றும் அரிவாள் வெட்டு சம்பவங்கள், முதன் முறையாக மெட்ரிக்குலேஷன் பள்ளியிலும் நடந்துள்ளது.
நாங்குநேரியில் பட்டியல் இன மாணவர் சின்னத்துரை, சக மாணவர்களால் ஜாதி ரீதியாக தாக்கப்பட்டதற்கு பின், நீதிபதி சந்துரு தலைமையிலான ஒருநபர் குழு தென் மாவட்டங்களில் விசாரணை மேற்கொண்டது; 2024 ஜூனில் அறிக்கையும் அளித்தது. அதில் பள்ளிகளில் மாணவர்களிடையே ஜாதி அடையாளங்களுக்கு தடை விதிக்க வேண்டும். பள்ளி பெயர்களில் ஜாதி இணைப்புகளை நீக்க வேண்டும். ஆசிரியர்கள், ஒரே பகுதியில் நீண்ட காலம் பணிபுரிவதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை தெரிவித்திருந்தது. அந்த ஆலோசனைகள் அமல்படுத்தப்படவில்லை.
நீதிபதி சந்துரு கடந்தாண்டு அளித்த அறிக்கைக்கு பின், இது குறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் இம்மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். நீண்ட காலமாக ஒரே பகுதியில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஜாதி ரீதியான மோதலுக்கு மாணவர்களை துாண்டுபவர்கள் என கண்டறியப்பட்ட 47 ஆசிரியர்களை வெவ்வேறு இடங்களுக்கு மாறுதல் செய்து அப்போதைய கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். ஆனால், ஆசிரியர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் ஆளுங்கட்சியின் அரசியல் தலையீட்டில் அந்த மாறுதல் உத்தரவை ரத்து செய்தனர். மீண்டும் பழைய இடங்களிலேயே பணியாற்றுகின்றனர்.இரு ஆண்டுகளுக்கு முன், முக்கூடல் அருகே பள்ளக்கால் பொதுக்குடியில் அரசு பள்ளியில், மூன்று மாணவர்களால் மாணவர் செல்வசூர்யா கொலை செய்யப்பட்டார். ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு மாணவர், சக மாணவர்களால் அரிவாளால் வெட்டப்பட்டார். நாங்குநேரி உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் மாணவர்களே பாதிக்கப்படுகின்றனர். எனவே ஜாதி ரீதியான போக்குகளால் ஏற்படும் வாழ்நாள் பாதிப்பு குறித்து மாணவர், பெற்றோருக்கு அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சீர்திருத்த பள்ளிக்கு போகணும்!
திருநெல்வேலியில் சக மாணவனை அரிவாளால் வெட்டிய மாணவனிடம், போலீஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவன், 'சமூக வலைத்தளங்கள், சினிமா, யு டியூப் பார்த்து, நானும் அதுபோல் சம்பவம் செய்ய வேண்டும் என நினைத்தேன். நான் என் நண்பனையே அரிவாளாள் வெட்டி விட்டேன். என்னை சிறுவர் சீர்திருத்த மையத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்' என, கூறியுள்ளார். மாணவனை போலீசார் இரவு வரையிலும் சிறார் குழும நீதிபதியிடம் ஆஜர்படுத்தவில்லை. தொடர்ந்து, அவனுக்கு குழந்தை பாதுகாப்பு அலுவலர் தலைமையிலான குழுவினர் கவுன்சிலிங் வழங்கினர்.
மாணவனின் பெயர்களை போடவில்லை ஒரு வேலை அமைதி மார்கத்வரை சேர்ந்தவரா என்ன என் என்றால் மேல பாளையம் ஒரு மினி பாகிஸ்தான் சில தெருவுகளில் நீங்கள் நடந்து சென்றால் பாகிஸ்தானில் இருப்பது போல உணர்வு வரும்