உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / போலீசில் போட்டு கொடுத்தவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

போலீசில் போட்டு கொடுத்தவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மானுார் அருகே பள்ளிக்கோட்டையைச் சேர்ந்தவர் செல்லத்துரை, 42; அ.தி.மு.க., பிரமுகர். நேற்று அதிகாலை மர்ம நபர்கள் இவரது வீட்டு சுற்றுச்சுவருக்குள் மது பாட்டிலில் பெட்ரோல் அடைத்து தீ வைத்து வீசினர்.பெட்ரோல் குண்டு சத்தமாக வெடித்த நிலையில், துாங்கிக் கொண்டிருந்த செல்லத்துரை மற்றும் குடும்பத்தினர் வந்து பார்த்தனர்.தாழையூத்தைச் சேர்ந்த ஒரு நபர் கஞ்சா விற்பது குறித்து செல்லத்துரை போலீசுக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் குண்டு வீசி இருக்கலாம் என்ற கோணத்தில் மானுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை