மேலும் செய்திகள்
கழிவுநீர் கலப்பதால் மாசடையும் குளம்
04-Nov-2025 | 1
நண்பரை குத்தி கொன்ற போதை ஆசாமி கைது
04-Nov-2025
போலி ஆவண மோசடி: சார்பதிவாளர் மீது வழக்கு
03-Nov-2025
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே அலைபேசியில் ஆன்லைன் கேம் விளையாடுவதில் கல்லுாரி மாணவர்களுக்குள் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. 21 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் 2 கல்லூரி மாணவர்கள் உட்பட 9 பேரை கைது செய்தனர்.சேரன்மாதேவி அருகே கோவிந்தபேரியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியான மனோ கல்லூரி உள்ளது. அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். மாணவர்கள் கல்லூரிக்கு வெளியே பஸ் ஸ்டாண்டில் அமர்ந்து இரு அணிகளாக பிரிந்து அலைபேசியில் ஆன்லைன் கேம் விளையாடியுள்ளனர். அப்போது இரு தரப்பிற்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு மோதலானது. கங்கனாங்குளம் பகுதியில் இரு கோஷ்டிகளாக மோதிக் கொண்டனர். இதில் ஒரு தரப்பினருக்கு ஆதரவாக உள்ளூரைச் சேர்ந்தவர்கள் எதிர்தரப்பு மாணவர்களை தாக்கினர்.சேரன்மாதேவி போலீசார் இச்சம்பவம் தொடர்பாக கல்லூரி மாணவர்கள் உட்பட 13 பேர் மீதும், மற்றொரு தரப்பினர் அளித்த புகாரின் பேரில் கல்லூரி மாணவர்கள் 8 பேர் மீதும் என 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். கங்கனான்குளத்தை சேர்ந்த சின்னராஜு 26, பாலகிருஷ்ணன் 25, மகேஷ் 21, அந்தோணிதாசன் 46, பட்டுசுந்தர் 38, தங்கம் 24, மற்றும் 2 கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
04-Nov-2025 | 1
04-Nov-2025
03-Nov-2025