மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
திருநெல்வேலி : நெல்லை அருகே லாரி டிரைவரை மிரட்டி பணம் பறித்ததாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சியில் இருந்து காவல்கிணறு நோக்கி சிமென்ட் லோடுடன் லாரி சென்று கொண்டிருந்தது. சிவகங்கையை சேர்ந்த மாரியப்பன்(25) லாரியை ஓட்டி வந்தார். பொன்னாக்குடியில் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் மாரியப்பன் ஓட்டலில் சாப்பிட்டார். அப்போது அங்கு வந்த நான்கு பேர் தங்களை அரசு அலுவலர்கள் என அறிமுகப்படுத்திக்கொண்டு லாரிக்கு வரியினங்கள் ஒழுங்காக செலுத்தப்பட்டுள்ளதா என ஆவணங்களை வாங்கி சரிபார்த்தனர். அவர்கள் டிரைவர் மாரியப்பனிடம் 500 ரூபாய் வாங்கினர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் மூன்றடைப்பு போலீசுக்கு தகவல் அளித்தனர். நான்குநேரி இன்ஸ்பெக்டர் விஜயக்குமார் விசாரணை நடத்தினார். இதுதொடர்பாக மருதகுளத்தை சேர்ந்த முருகக்குட்டி(32), பரமசிவன்(36), கர்ணன்(27), இசக்கி(34) கைது செய்யப்பட்டனர்.
29-Sep-2025
25-Sep-2025