உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / நீயும் டிகிரி இல்லை ...நானும் டிகிரி இல்லை: மேயரை பார்த்து பேசிய தி.மு.க., கவுன்சிலர்

நீயும் டிகிரி இல்லை ...நானும் டிகிரி இல்லை: மேயரை பார்த்து பேசிய தி.மு.க., கவுன்சிலர்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி கூட்ட தகவல்களை ஆங்கிலத்தில் தந்ததால் தமிழில் தரக்கோரி தி.மு.க., பெண் கவுன்சிலர் பேச்சியம்மாள் மேயரை பார்த்து 'நீயும் டிகிரி இல்லை ... நானும் டிகிரி இல்லை ...மாநகராட்சி விவரங்களை தமிழில் தாருங்கள்' எனக் கேட்டது நகைச்சுவையை ஏற்படுத்தியது.இம்மாநகராட்சி கூட்டம் நடந்தது. மேயர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். கமிஷனர் சுகபுத்ரா, துணை மேயர் ராஜு முன்னிலை வகித்தனர்.மேலப்பாளையம் மண்டலத்தில் 2019 ல் துவங்கப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சமுதாய நலக்கூடம் கட்டடம் இன்னும் பணிகள் நிறைவு பெறாமல் கிடப்பில் உள்ளது என தி.மு.க.,மண்டல தலைவர் கதீஜா இக்லாம் பாசிலா பேசினார்.அந்த கட்டடப் பணிகள் துவங்கும் போது இடம் எங்கள் வார்டில் இருந்தது. தற்போது எந்த வார்டில் உள்ளது என கேட்டார். அதற்கு தி.மு.க., கவுன்சிலர் ரம்ஜான் அலி 'அது எங்கள் வார்டில் உள்ளது. நாங்கள் தான் அதற்கு நிலம் தந்துள்ளோம் 'என பேசினார். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.தாமிரபரணி ஆற்றில் இருந்து மாநகராட்சிக்கு குடிநீர் எடுக்கும் மையங்களில் செயல்படும் ஸ்கேடா எனும் குடிநீர் அளவை கண்டறியும் கருவிகள் பாதிக்கும் மேற்பட்டவை செயல்படாமல் உள்ளது குறித்து கவுன்சிலர்கள் கேட்டனர். அவற்றை சீர் செய்ய உள்ளதாக கமிஷனர் சுகபுத்ரா தெரிவித்தார். முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் திறக்கப்படாமல் உள்ள காந்தி மார்க்கெட் உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும் கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர். விரைவில் மார்க்கெட் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு தரப்படும் தீர்மானம் உள்ளிட்டவை விவரங்கள் ஆங்கிலத்தில் உள்ளன என பேசிய வயது மூத்த தி.மு.க. பெண் கவுன்சிலர் பேச்சியம்மாள், மேயர் ராமகிருஷ்ணனை பார்த்து 'நீயும் டிகிரி இல்லை ... நானும் டிகிரி இல்லை ... பிறகு எதற்கு விவரங்களை ஆங்கிலத்தில் தருகிறீர்கள். தமிழில் தாருங்கள் ''என்றார் .இது மாநகராட்சி அவையில் நகைச்சுவையை ஏற்படுத்தியது. கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பேசுவதற்கு அதிக நேரம் தரப்படுகிறது எனக்கூறி தமக்கு பேச வாய்ப்பளிக்கவில்லை என தி.மு.க. கவுன்சிலர் ரவீந்தர் ஆத்திரத்தில் தன் முன்பாக இருந்த குடிநீர் பாட்டிலை துாக்கி வீசிவிட்டு வெளிநடப்பு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Matt P
ஏப் 25, 2025 16:00

டிகிரி கிடைத்தவர்களெல்லாம் இங்கிலீஷுகாரங்க என்று இப்போ தான் தெரியுது. கருணாநிதி படத்தை இவ்வளவு பெரிசா மன்றத்தில் மாட்ட வேண்டுமா? சாப்ளின் முதல்வர் சரி. திமுக கொடியையும் உள்ள பறக்க விட்டிருக்கலாம். இரண்டு திமுக தலைவர்கள் படம் வைக்கலாம்னா? பொதுவா மாநகராட்சிகள் வெளியே தேசிய கொடி தானே பறக்குது. உள்ளெ ருணாநிதி படம். அதுவும் பெரிசா?


Palanisamy T
ஏப் 25, 2025 12:28

அநாகரீகமான திமுக கவுன்சிலர். எல்லா திமுக கவுன்சிலர்களும் இவரைப் போன்றுதான் இருப்பார்களா? ஒருப் பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.


Venkateswaran Rajaram
ஏப் 25, 2025 11:47

படித்தவர்களை படிக்காத முட்டா ள் கள் ஆள்வதுதான் பணநாயகம்


Venkateswaran Rajaram
ஏப் 25, 2025 11:44

படிக்காத மொள்ளமாரிகளுக்கு தான் மெத்த படித்த அறிவாளிகள் ஓட்டு போட்டு படிக்காத மொள்ளமாரிகளிடம் படித்த அறிவாளிகள் அடிமையாக இருக்கிறோம் ...


நாஞ்சில் நாடோடி
ஏப் 25, 2025 13:04

மெத்தப்படித்த மேதாவிகள் தேர்தல் அன்று ஓட்டு போட வரமாட்டார்கள். அவர்களுக்கு சமுதாயத்தின் மீது அக்கறை கிடையாது. அப்படியிருக்கும் போது விளைவை எல்லோரும் சந்தித்தே ஆக வேண்டும்...


Saran
ஏப் 25, 2025 10:44

But we both are criminals. Idiot people who have voted for them


M S RAGHUNATHAN
ஏப் 25, 2025 07:53

மேயர் நரகத் தந்தை பொட்டு/ விபூதி வைத்து இருக்கிறாரே ? துணைப் பொதுச் செயலாளர் ஆ ராசா அவரை கட்சியில் இருந்து நீக்குவாரா ?


Sivaswamy Somasundaram
ஏப் 25, 2025 07:01

நீயும் பொம்மை நானும் பொம்மை நினைச்சுப் பார்த்தா எல்லாம் பொம்மை.


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
ஏப் 25, 2025 06:26

ஆபாச பேச்சு இல்லை என சந்தோஷ படுங்கள்


நிக்கோல்தாம்சன்
ஏப் 25, 2025 04:48

எல்லாவற்றையும் தமிழ்படுத்தும் தமிழக முதல்வர் மேயர் என்னும் வார்த்தையை இன்னமும் தமிழ் சொல் உபயோகப்படுத்தாமலே இருப்பது


M S RAGHUNATHAN
ஏப் 25, 2025 07:52

நரகத் தந்தை. எழுத்து பிழை இல்லை


Matt P
ஏப் 25, 2025 16:02

முதல்வர்... மாநில அப்பா. மேயர் ...நகர அப்பா.


நிக்கோல்தாம்சன்
ஏப் 27, 2025 05:04

வாசகர்களே உங்கள் கருத்துக்களை சிரிக்காமல் படிக்க முடியவில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை