உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / மணிமுத்தாறு நீர் கேட்டு விவசாயிகள் போராட்டம்

மணிமுத்தாறு நீர் கேட்டு விவசாயிகள் போராட்டம்

திருநெல்வேலி::திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணையில் இருந்து, அம்பாசமுத்திரம் துவங்கி பொன்னாக்குடி, நாங்குநேரி உட்பட நான்கு ரீச் பகுதிகளாக பிரிக்கப்பட்டு தண்ணீர் வழங்கப்படுகிறது. இரண்டாவது ரீச் பகுதியில் உள்ள பொன்னாக்குடி குளம், சுந்தரபாண்டிய குளம் பகுதிகளுக்கு போதுமான தண்ணீர் வழங்கப்படவில்லை.கடந்த டிசம்பரில் அதிக மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும் கூட பொன்னாக்குடி சுற்று வட்டார பகுதிகளில் விவசாயம் பாதிக்கும் நிலை உள்ளது. எனவே, தண்ணீர் வழங்க வலியுறுத்தி நேற்று விவசாயிகள் பொன்னாக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதிகாரிகள் அவர்களுடன் பேசி, போராட்டத்தை கைவிடச் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ