உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி /  தாமிரபரணியில் வெள்ளம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

 தாமிரபரணியில் வெள்ளம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

திருநெல்வேலி: தாமிரபரணியில் 16 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுவதால் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தொடர்மழையினால் அணைகளின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளிலிருந்து வினாடிக்கு 12,000 கனஅடி மற்றும் மணிமுத்தாறு அணையிலிருந்து 4,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. பெய்யக்கூடிய மழையின் அளவைப் பொறுத்து, ஆற்றில் திறந்துவிடப்படும் நீரின் அளவு , வேகம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் யாரும் தாமிரபரணி ஆற்றில் இறங்க வேண்டாம் என்றும், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்


...

24-Nov-2025  


புதிய வீடியோ