/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / செக் மோசடி வழக்கில் ஏட்டுக்கு சிறைத்தண்டனை ரூ.4 லட்சம் அபராதம் விதிப்பு
செக் மோசடி வழக்கில் ஏட்டுக்கு சிறைத்தண்டனை ரூ.4 லட்சம் அபராதம் விதிப்பு
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் பழவூர் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிபவர் அசோகன். இவர் பணகுடியைச் சேர்ந்த ஜான் போஸ்கோவிடம் 2017ல் செக் கொடுத்து ரூ.4 லட்சம் கடன் வாங்கினார். ஆனால் அவர் கடனை திரும்ப செலுத்தவில்லை. இதுகுறித்து ஜான் போஸ்கோ வள்ளியூர் கூடுதல் உரிமையியல் கோர்ட்டில் அசோகன் மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தார்.நீதிபதி ஆன்ஸ் ராஜா ஏட்டு அசோகனுக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 4 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 4 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.