உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / வாலிபர் கொலை வழக்கு 3 பேருக்கு ஆயுள்

வாலிபர் கொலை வழக்கு 3 பேருக்கு ஆயுள்

திருநெல்வேலி:நான்குநேரி அருகே முன்விரோதம் காரணமாக வாலிபரை கொலை செய்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட் தீர்ப்பளித்தது. நெல்லை மாவட்டம், நான்குநேரி தாலுகா, தம்புபுரத்தை சேர்ந்த நல்லக்கண்ணு,29. இவரது குடும்பத்திற்கும், அதே பகுதியை சேர்ந்த வானுமாமலை, 43, குடும்-பத்திற்கும் இடையே பிரச்னை இருந்தது. இதனால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக கடந்த 2015ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி வானுமாமலை (43) உட்பட 5பேர் சேர்ந்து நல்லக்கண்ணுவை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். இது குறித்து நான்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து வானுமாமலை, முத்-துலட்சுமி, 42, போத்தி வானுமாமலை, 44, நான்குநேரி நம்பி நகர் நீல நாராய-ணன், 33, முத்து ராமலிங்கம் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்ட 3வது கூடுதல் அமர்வு கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்-தது. கோர்ட்டில் வழக்கு விசாரணையில் இருந்த கால கட்டத்தில் முத்துராம-லிங்கம் இறந்தார். அவரை தவிர்த்து மற்ற 4 பேர் மீதான வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம், குற்றம் சாட்டப்பட்ட வானுமா-மலை, நீல நாராயணன், போத்தி வானுமாமலை ஆகிய 3 பேருக்கு ஆயுள் தண்-டனை மற்றும் தலா ரூ.ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் முத்து-லட்சுமி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அவரை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு வக்கீல் சூர சங்கரவேல் ஆஜரானார்.வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த நான்குநேரி போலீசாரை எஸ்.பி., சிலம்பரசன் பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ