மேலும் செய்திகள்
மணல் கடத்திய வாலிபர் கைது
14-Sep-2024
திருநெல்வேலி,:திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே மணல் கடத்தல் வழக்கில் அப்பாவி நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு 5 ஆண்டுகளாக தப்பித்து வரும் மணல் மாஃபியா கும்பலைச் சேர்ந்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.வள்ளியூர் அருகே நம்பியாற்றின் குறுக்கே மாவடி -- துலுக்கர்பட்டி இடையே 2019ல் ரூ. 3 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி நடந்தது. மணல் சப்ளை செய்யும் பொறுப்பை நாகர்கோவில் கோணத்தைச் சேர்ந்த பிதலிஸ் மகன் ரவி 53, மேற்கொண்டார். நாங்குநேரி அருகே பட்டர்புரத்தில் லாரிகளில் அனுமதியின்றி மணல் கடத்தினார். நாங்குநேரி போலீசார் மணல் லாரிகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ரவி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். ரவியை போலீசார் தேடி வந்தனர்.இதற்கிடையில் நீதிமன்றத்தில் அவருக்கு பதில் திருநெல்வேலி குறிச்சி அழகிரிபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ரவி ஆஜர்படுத்தப்பட்டார். அவரை போலீசார் ஒரு வழக்கில் ஜாமின் கையெழுத்து போட வேண்டும் எனக்கூறி அழைத்துச் சென்று மணல் கடத்தல் வழக்கில் சேர்த்ததாக தகவல் வெளியானது. ரூ.1500 க்காக ரவி இதில் சிக்கினார்.ஆனால் தான் ஜாமின் கையெழுத்து போடவில்லை என்றும் மணல் கடத்தல் வழக்கில் கைதாகி ஜாமினில் விடப்பட்டுள்ளோம் என்பதை பின்னர் ரவி உணர்ந்தார். இதுகுறித்து மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் அவர் புகார் செய்தார். ஆனால் அதிகாரிகள் அதனை கிடப்பில் போட்டனர்.மணல் வழக்கில் ஆஜராகாமல் தப்பித்த நாகர்கோவில் ரவி 5 ஆண்டுகளாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு வீடு கட்ட மணல் சப்ளை, நாங்குநேரி பெண் போலீஸ் அதிகாரிக்கு ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான எல்.இ.டி., டிவி வழங்கி தப்பித்து வருகிறார்.ஆள் மாறாட்டம் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அழகிரிபுரம் ரவி மனு மீதான விசாரணை தற்போதைய மாவட்ட எஸ்.பி., சிலம்பரசனால் தூசி தட்டி எடுக்கப்பட்டது. இதுகுறித்து ஏ.எஸ்.பி., பிரசன்ன குமார் விசாரணை மேற்கொண்டார்.மணல் கடத்தல் வழக்கில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்பட்டது. நாகர்கோவில் ரவி மீது மணல் கடத்தல் மற்றும் ஆள் மாறாட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசிக்கும் நாகர்கோவில் ரவி வழக்கம் போல போலீஸ் அதிகாரிகளுக்கு தேவையான மணல் உள்ளிட்டவற்றை சப்ளை செய்து தப்பித்து வருகிறார் என மற்ற போலீசார் தெரிவித்தார்.
14-Sep-2024