உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / நடத்தை சந்தேகத்தால் தாயை அடித்து கொன்ற மகன் கைது

நடத்தை சந்தேகத்தால் தாயை அடித்து கொன்ற மகன் கைது

திருநெல்வேலி: நடத்தையில் சந்தேகமடைந்து தாயை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி அருகே எடுப்பலை சேர்ந்த பாண்டி மனைவி ரெஜினா 44. பாண்டி சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். ரெஜினா இரு மகன்களுடன் வசித்தார். மூத்த மகன் கொம்பையா, 22, கூலி வேலை செய்து வந்தார். சில நாட்களாக ரெஜினாவுக்கும், கொம்பையாவுக்கும் தகராறு இருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு கோவில் கொடை விழாவிற்கு சென்று வீடு திரும்பிய கொம்பையா, தாயுடன் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆத்திரமடைந்த அவர், இரும்பு கம்பியால் ரெஜினாவின் தலையில் தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். உடலை மீட்ட மூலைக்கரைப்பட்டி போலீசார், பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். ரெஜினா அப்பகுதி வாலிபருடன் பழகி வந்ததும், இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் மகனே தாயை கொலை செய்ததும் தெரிய வந்தது. கொம்பையாவை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை