மேலும் செய்திகள்
முன்னாள் தலைவருக்குகத்திக்குத்து
28-Mar-2025
திருநெல்வேலி:திருநெல்வேலியில் பூர்வீக நிலத்தை விற்றதில் ரூ. 60 லட்சம் கொடுத்த நிலையில் கூடுதல் பணம் கேட்டு தராததால் தந்தையை வெட்டிக் கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டம் சிவந்திபட்டி அருகே முத்துார் கிராமத்தை சேர்ந்தவர் பூலையா 70. விவசாயி.இவரது மனைவி லட்சுமி. இவர்களது ஒரே மகன் கணேசன் 45. திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகிறார். பூலையா தனது தந்தை பெயரில் பூர்விக நிலத்தை ஒரு கோடிக்கும் அதிகமான மதிப்பில் விற்றுள்ளார். அதில் கிடைத்த தொகையில் மகன் கணேசனுக்கு ரூ. 60 லட்சம் கொடுத்துள்ளார்.அதில் கணேசன் குடும்பத்தினருக்கு நகைகள் வாங்கியுள்ளார். பழைய வீட்டை இடித்து புதுப்பித்து கட்டிவருகிறார். அதற்கு மேலும் ரூ.10 லட்சம் தருமாறு தந்தையிடம் கேட்டுள்ளார். ஆனால் போதிய தொகை தந்துவிட்டதாக அவர் தெரிவித்தார். இதனால் ஆத்திரமுற்ற கணேசன், நேற்று மதியம் மருத்துவமனைக்கு செல்வதற்காக பஸ் ஸ்டாப்பில் காத்திருந்த பூலையாவை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார்.சிவந்திபட்டி போலீசார் கணேசனை கைது செய்தனர். அவரது மனைவி சங்கரம்மாளையும் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
28-Mar-2025