உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / கிரிண்டர் ஆப் மூலம் அழைத்து அலைபேசி, டூவீலர் பறிப்பு * மூன்று பேர் கைது

கிரிண்டர் ஆப் மூலம் அழைத்து அலைபேசி, டூவீலர் பறிப்பு * மூன்று பேர் கைது

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டத்தில் கிரிண்டர் ஆப் மூலம் வாலிபருடன் நட்பாக பழகி அவரை தனியாக வரவழைத்து அலைபேசி, டூவீலரை பறித்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.திருநெல்வேலி மானூரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் ஒரு கம்பெனியில் பணிபுரிகிறார். இவர் திருமலைக்கொழுந்துபுரத்தைச் சேர்ந்த முத்துக்குமாருடன் 22, கிரிண்டர் ஆப் மூலம் நட்பாக பழகினார். இந்த செயலி ஓரினச் சேர்க்கையாளர்களை ஒன்றிணைப்பதாகும்.தனியாக வந்த அந்த வாலிபரை முத்துக்குமார் மற்றும் நண்பர்கள் நல்லமுத்து 24, ராஜவல்லிபுரம் ஜெயராம் 21, ஆகியோர் சேர்ந்து தகாத வார்த்தைகளால் பேசி அவரிடம் இருந்து பணத்தை பறிக்க முயன்றனர். அவரிடம் பணம் இல்லாததால் அவர் வைத்திருந்த அலைபேசி, டூவீலரை பறித்து கொண்டனர். அவர்களிடமிருந்து தப்பிய வாலிபர் போலீசில் புகார் செய்தார். அதன்படி முத்துக்குமார் உள்ளிட்ட மூவரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி