மேலும் செய்திகள்
ஜெயிலர் மீது தாக்குதல் கைதி மீது புகார்
09-Dec-2025
அரசு பள்ளியில் கட்டப்பட்ட புதிய கழிப்பறை உடைப்பு
07-Dec-2025 | 2
வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது
06-Dec-2025
மோசடியாக அல்வா விற்பனை 6 கடைகள் மூடல்
06-Dec-2025
திருநெல்வேலி : பணி நிறைவு பெற்ற தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.சீதபற்பநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 21 ஆண்டுகளாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற அலுவலக உதவியாளர் ஆறுமுகம் பணி நிறைவு பாராட்டு விழா நெல்லை ஜங்ஷன் என்.ஜி.ஓ கூட்ட அரங்கில் நடந்தது.மாவட்ட தலைவர் கணபதி தலைமை வகித்தார். தனி அலுவலர் முருகன் முன்னிலை வகித்து வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை நிதி, சரண்டர் ஊதியத்திற்கான செக்கை, ஆறுமுகத்திற்கு வழங்கினார். வேலுச்சாமி வரவேற்றார். மாநில பொருளாளர் முத்துப்பாண்டியன் சிறப்புரை ஆற்றினார்.மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன், துணைத் தலைவர் சாமுவேல் மனோகர், பால்ராஜ், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜேசுராஜன், பொருளாளர் கல்யாண ராமன், குமரி மாவட்ட தலைவர் ஞானதாஸ், மாவட்ட செயலாளர் முருகானந்தம், நெல்லை பேரங்காடி அண்ணா ஊழியர் சங்க செயலாளர் நாராயணன், மானூர் ஒன்றிய செயலாளர் பிச்சுமணி, பாளை ஒன்றிய தலைவர் நடராஜ கண்ணன், செயலாளர் குமார சுப்பிரமணியன், துணைத் தலைவர் ரங்கன், இணை செயலாளர் பழனி, சங்க காசாளர் வனமுத்து உட்பட பலர் பேசினர். ஆறுமுகம் ஏற்புரை நிகழ்த்தினார்.சங்க முதுநிலை எழுத்தர் மாரியப்பன் நன்றி கூறினார்.
09-Dec-2025
07-Dec-2025 | 2
06-Dec-2025
06-Dec-2025