மேலும் செய்திகள்
ஜெயிலர் மீது தாக்குதல் கைதி மீது புகார்
09-Dec-2025
அரசு பள்ளியில் கட்டப்பட்ட புதிய கழிப்பறை உடைப்பு
07-Dec-2025 | 2
வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது
06-Dec-2025
மோசடியாக அல்வா விற்பனை 6 கடைகள் மூடல்
06-Dec-2025
திருநெல்வேலி : நெல்லை ஜங்ஷன் போலீஸ் ஸ்டேஷன் முன்புள்ள 'அபாயக்குழி'யை மூட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.நெல்லை ஜங்ஷன் ஈரடுக்கு மேம்பாலத்தையொட்டி பாலம் போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. இந்த ஸ்டேஷன் வளாகத்தில் சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, மகளிர் போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இந்த ஸ்டேஷன்களுக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.ஸ்டேஷன் முன்பு ரோட்டில் சில வாரங்களாக 'அபாயக்குழி' உள்ளது. ரோட்டில் இரு சக்கர வாகனங்கள் வேகமாக செல்லும் போது குழியில் சிக்கி விபத்து ஏற்படும் நிலையுள்ளது. கவனக்குறைவாக ரோட்டில் நடந்து செல்பவர்களும் குழியில் சிக்கி காயமடையும் சூழ்நிலையுள்ளது. எனினும் அபாயக்குழியை யாரும் கண்டுகொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.அப்பகுதிமக்கள் மேலும் கூறும்போது, ''இரவு போலீஸ் ஸ்டேஷனுக்கு இரு சக்கர வாகனத்தில் வருபவர்கள் குழியில் சிக்கி கீழே விழுந்து காயமடைய வாய்ப்புள்ளது. மழைக்காலத்தில் குழியில் இருந்து கழிவுத்தண்ணீர் ரோட்டில் செல்லும் தண்ணீருடன் கலந்து சுகாதாரக்கேடு ஏற்படும். விபத்து ஏற்படுத்த காத்திருக்கும் குழியை மூட சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.
09-Dec-2025
07-Dec-2025 | 2
06-Dec-2025
06-Dec-2025