மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
ஆலங்குளம் : நாகர்கோவில் கல்லூரி காவலாளிகள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர் உட்பட 5 கொள்ளையர்களை ஆலங்குளம் போலீசார் கைது செய்தனர். ஆலங்குளம் பகுதியில் கடந்த சில மாதங்களாக வழிப்பறி, நகைபறிப்பு, கம்ப்யூட்டர்கள் கொள்ளை என தொடர் கொள்ளை சம்பவங்கள் நடந்தன. இதை தொடர்ந்து ஆலங்குளம் டிஎஸ்பி., மரியரோணிக்கம் உத்தரவுபடி இன்ஸ்பெக்டர் கோவிந்தன் தலைமையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்நிலையில் ஆலங்குளம் அருகே நல்லூர் விலக்கில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாரிடம் சந்தேகப்படும்படி 5 வாலிபர்கள் சிக்கினர். விசாரனையில் அவர்கள் மேலச்செவல் நேசமாணிக்கத்தை சேர்ந்த முருகன்(எ)முருககுட்டி(22), இசக்கிபாண்டி(27), மகாராஜன்(21), கோவையை சேர்ந்த பாண்டியராஜன்(22), உக்கிரபாளையம் ரோடு ஜி.எம். நகரை சேர்ந்த ஹரிதாஸ்(23) என்பது தெரியவந்தது.
இவர்களிடம் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் முருகன், பாண்டியராஜன், மகாராஜன் ஆகிய மூவரும் கடந்த மே 4ம் தேதி நாகர்கோவில் அருகே அஞ்சுகிராமம் தனியார் கல்லூரி அருகே இருந்த ஏ.டி.எம்.,மில் கொள்ளையடிக்க முயன்றதும், அங்குவந்த கல்லூரி காவலாளிகள் பால்பாண்டி(56), சுடலைமுத்து(60) ஆகிய இருவரை கொலை செய்ததும் தெரியவந்தது. இச்சம்பவத்திற்கு பின் கொலையாளிகள் மூவரும் இசக்கிபாண்டி, ஹரிதாஸ் இருவருடன் சேர்ந்து பல கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். கடந்த 1ம் தேதி ஆலங்குளத்தில் ஒரு பெண்ணிடம் 40 கிராமம் நகையையும், அரியநாயகிபுரத்தில் ஒரு பெண்ணின் நகையையும் கொள்ளையடித்துள்ளனர். மேலும் முக்கூடல், பத்தமடையில் 2 பைக்குகளையும் திருடியுள்ளனர். கொள்ளையர்களிடம் இருந்து 60 கிராம் நகைகளையும், 2 பைக்குகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். நெல்லை முழுவதிலும் பல இடங்களில் இவர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். மேலச்செவல் கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் இவர்கள்தான் என போலீசார் தெரிவித்தனர்.
29-Sep-2025
25-Sep-2025