உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / வி.கே.புரத்தில் ஓய்வு பெற்றபோஸ்ட்மேனை தாக்கியவர் கைது

வி.கே.புரத்தில் ஓய்வு பெற்றபோஸ்ட்மேனை தாக்கியவர் கைது

விக்கிரமசிங்கபுரம்:விக்கிரமசிங்கபுரத்தில் முன்விரோதம் காரணமாக ஓய்வு பெற்ற போஸ்ட்மேனை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.விக்கிரமசிங்கபுரம் மேலமுப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணபதி (71). ஓய்வுபெற்ற போஸ்ட்மேன். இவருக்கும் இதே ஊரை சேர்ந்த இவரது தம்பி பூதப்பாண்டி மகன் சக்திக்கும் சொத்து சம்பந்தமாக முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் நேற்று இது சம்பந்தமாக ஆத்திரமடைந்த சக்தி விக்கிரமசிங்கபுரம் மெயின் ரோட்டில் நின்று கொண்டிருந்த கணபதியை கம்பால் தாக்கியதில் படுகாயமடைந்தார்.இச்சம்பவம் குறித்து கணபதி கொடுத்த புகாரின் பேரில் விக்கிரமசிங்கபுரம் போலீசார் சக்தியை கைது செய்தனர். சக்தியின் தம்பி சந்தானத்தை போலீசார் தேடி வருகின்றனர். காயமடைந்த கணபதி சிகிச்சைக்காக அம்பாசமுத்திரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை