மேலும் செய்திகள்
ஜெயிலர் மீது தாக்குதல் கைதி மீது புகார்
09-Dec-2025
அரசு பள்ளியில் கட்டப்பட்ட புதிய கழிப்பறை உடைப்பு
07-Dec-2025 | 2
வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது
06-Dec-2025
மோசடியாக அல்வா விற்பனை 6 கடைகள் மூடல்
06-Dec-2025
திருநெல்வேலி:திருநெல்வேலி-- - திருச்செந்தூர் இடையே ரயில்வே தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டதால் நேற்று இரவு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது. இன்று முதல் வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்படுகின்றன.திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் டிச.,17, 18 ல் அதிகனமழை பெய்தது. தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் குளங்கள் உடைப்பால் திருநெல்வேலி - -திருச்செந்தூர் ரயில் தண்டவாளத்தில் தாதன்குளம், நாசரேத் உட்பட 5 இடங்களில் அரிப்புகள் ஏற்பட்டன.குறிப்பாக தாதன்குளம் பகுதியில் ஏற்பட்ட வெள்ள அரிப்பால் டிச.17 இரவு ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் இரண்டு நாட்கள் வெள்ளத்தில் தத்தளித்தது.தற்போது அனைத்து பகுதிகளிலும் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்தன. நேற்று தெற்கு ரயில்வே தலைமை பொறியாளர் பென்னி தலைமையில் இன்ஜின் வேக சோதனை ஓட்டம் நடந்தது.உதவி கோட்ட பொறியாளர் முத்துக்குமார், போக்குவரத்து ஆய்வாளர் ராமச்சந்திரன், நெல்லை செக்சன் இன்ஜினியர் முருகேசலிங்கம், திருநெல்வேலி நிலைய மேலாளர் முருகேசன் உள்ளிட்டோர் உடன் பயணித்தனர்.ரயில் இன்ஜின் மட்டும் அதிகபட்சமாக 75 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்தது. வெள்ளத்தால் அரிப்பு ஏற்பட்ட பகுதியில் 20 கி.மீ., வேகத்தில் சென்றது. திருநெல்வேலியில் நேற்று காலை 11:28க்கு கிளம்பிய ரயில் இன்ஜின் மதியம் 12:35க்கு திருச்செந்தூர் ரயில் நிலையம் அடைந்தது. பின்னர் 12:45 க்கு அங்கிருந்து கிளம்பிய ரயில் இன்ஜின் மதியம் 2:10க்கு திருநெல்வேலியை அடைந்தது. திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு நேற்று மாலை 5:00 மணிக்கு கிளம்பிச் சென்ற செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 8:30 மணிக்கு வழக்கம் போல திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு கிளம்பியது. இன்று காலை முதல் வழக்கமான ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே வட்டாரங்களில் தெரிவித்தனர்.
09-Dec-2025
07-Dec-2025 | 2
06-Dec-2025
06-Dec-2025