உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / அதிமுக., திமுக.,விற்கு எதிராக பீடித் தொழிலாளர்கள் வாக்களிக்க முடிவு

அதிமுக., திமுக.,விற்கு எதிராக பீடித் தொழிலாளர்கள் வாக்களிக்க முடிவு

திருநெல்வேலி : உள்ளாட்சி தேர்தலில் அதிமுக- திமுகவிற்கு எதிராக பீடித் தொழிலாளர்கள் வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு பீடித் தொழிலாளர் சம்மேளன பொதுசெயலாளர் ராஜாங்கம், சிஐடியு., மாவட்ட செயலாளர் மோகன் தெரிவித்துள்ளனர்.இது குறித்து அவர்கள் அறிக்கையில் கூறியிருப்பதாவது;நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்தில் 5லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் கூலி உயர்வு பிரச்னையில் அதிமுக., திமுக அரசுகள் ஒரு தலைபட்சமாக செயல்பட்டு வருகின்றன.ஐந்து லட்சம் பீடித் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க கோரி சிஐடியு., சார்பில் தர்ணா, ஆர்ப்பாட்டம், வேலைநிறுத்தம், மறியல் உட்பட பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதுகுறித்து தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியிடமும், தற்போதைய முதல்வர் ஜெயலிதாவிடமும் பல முறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை.எனவே பீடித் தொழிலாளர்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் அதிமுக., திமுகவிற்கு உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதில்லை என தமிழ்நாடு பீடித் தொழிலாளர் சம்மேளனம் முடிவு செய்துள்ளது.இதற்கு பதிலாக மா.கம்யூ., தேமுதிக வேட்பாளர்கள் மற்றும் இதர ஜனநாயக சக்திகளுக்கு வாக்களிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு ராஜாங்கம், மோகன் அறிக்கையில் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ