மேலும் செய்திகள்
தேர்தலில் போட்டியிடாத அரசியல் கட்சிகள் நீக்கம்
19-Aug-2025
திருநெல்வேலி; ஆறாண்டுகளாக போட்டியிடாத அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. திருநெல்வேலியில் பதிவு செய்யப்பட்டுள்ள ஜான்பாண்டியன் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், அனைத்திந்திய பசும்பொன் முன்னேற்ற கழகம், எழுச்சி தேசம், கூடங்குளம் அணுமின் நிலை எதிர்ப்பாளர் உதயகுமாரின் பச்சைத் தமிழகம் ஆகிய 4 கட்சிகள் 2019 முதல் எந்தத் தேர்தலிலும் போட்டியிடவில்லை. இதுகுறித்து ஆக., 26க்குள் சென்னை தலைமை தேர்தல் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணைக்கு பிறகு இறுதி முடிவை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என மாவட்ட தேர்தல் அலுவலர் இரா.சுகுமார் அறிக்கை தெரிவித்துள்ளார்.
19-Aug-2025