உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / மின்சாரம் தாக்கி இருவர் பலி

மின்சாரம் தாக்கி இருவர் பலி

திருநெல்வேலி:திருநெல்வேலி, கொக்கிரகுளத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரன், 58. வீட்டின் ஒரு பகுதியை விரிவுபடுத்தி புதிய கட்டடம் கட்டி வருகிறார். புதிய கட்டுமானத்தில் பைப் வாயிலாக தண்ணீரில் நனைக்கும் பணியை நேற்று காலை கஜேந்திரன் மகன் சஞ்சய், 30, மேற்கொண்டார்.கட்டுமான பகுதியில் மின்சார பெட்டி இருந்தது. அதில், தண்ணீர் பட்டதால் தண்ணீரில் மின்சாரம் பாய்ந்தது. இதில், சஞ்சய் துாக்கி வீசப்பட்டார்.அவரை மீட்க முயன்ற பக்கத்து வீட்டுக்காரர் மாரியப்பன், ரவி, 46, ஆகியோர் மின்சாரம் பாய்ந்து காயமுற்றனர். மூவரும் மருத்துவமனைக்கு துாக்கிச் செல்லப்பட்டனர். ஆனால், சஞ்சய், ரவி வழியிலேயே இறந்தனர்.இன்ஜினியரிங் பட்டதாரியான சஞ்சய், ஹாக்கி வீரர். விளையாட்டு ஒதுக்கீட்டில் அரசு பணியில் சேர சென்னையில் பயிற்சி எடுத்து வந்தார்.ரவியின் மகள் நேத்ரா தற்போது பிளஸ் 2 தேர்வு எழுதி வருகிறார். அவர் பிற்பகலில் வீடு திரும்பிய போது, தந்தை இறந்தது அறிந்து அதிர்ச்சியடைந்தார். திருநெல்வேலி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !