உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / பல்கலை மாணவருக்கு கத்திக்குத்து

பல்கலை மாணவருக்கு கத்திக்குத்து

திருநெல்வேலி:திருநெல்வேலி டவுன், அக்கசாலை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த நண்பர்கள் தவசி பெருமாள், 19, செல்வசூர்யா, 19; மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை மாணவர்கள். சில நாட்களுக்கு முன் தவசியின் டூ - வீலரை, செல்வசூர்யா எடுத்து சென்றார். திரும்ப கொடுக்கவில்லை. செல்வசூர்யா வீட்டில் இருந்த டூ - வீலரை எடுக்க சென்ற போது, டூ - வீலர் சேதமடைந்திருந்தது. பழுது பார்க்க தவசி பணம் கேட் டதில் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், செல்வசூர்யா, அவரது நண்பர் சுப்பையா ஆகியோர், தவசி பெருமாளை கத்தியால் குத்தி தப்பினர். தவசி பெருமாள் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செல்வ சூர்யா, சுப்பையாவை போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை